பார்வையாளர்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு? – விரைவில் அறிவிப்பு!

It has been reported that jallikattu competitions will be held in Tamil Nadu without spectators.

தமிழகத்தில் பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பார்வையாளர்களின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு நடைபெற்று வரும் நிலையில், தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், பார்வையாளர்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு? நடத்தப்படுமா என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.