ஜெயலலிதாவுக்கு கால்கள் இல்லை என்ற வதந்தி பொய் என்று சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
unknown nodeஇந்நிலையில் நேற்று அப்பலோ மருத்துவர் மீரா வாக்குமூலம் ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்தார்.அதன் பின்னர் ,அது தொடர்பாக சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு கால்களில் இருந்து இதயத்துக்கு செல்லும் நாளங்களில் சோதனை செய்ததாக அப்பலோ மருத்துவர் மீரா வாக்குமூலம் அளித்துள்ளார்.எனவே மருத்துவர் மீராவின் வாக்குமூலத்தால், ஜெயலலிதாவுக்கு கால்கள் இல்லை என்ற வதந்தி பொய் என தெரியவந்துள்ளது என்று சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.