ஜெயலலிதா நினைவு நாள் ஏற்பாடுகள்...!கட்சி நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று மாலை ஆலோசனை...!

ஜெயலலிதா நினைவு நாள் ஏற்பாடுகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று மாலை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இது தொடர்பாக அதிமுக

ஜெயலலிதா நினைவு நாள் ஏற்பாடுகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று மாலை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.இது தொடர்பாக அதிமுக  தலைமைக் கழக வெளியிட்ட  அறிவிப்பில் ,டிசம்பர்  5-ஆம் தேதி ஜெயலலிதா நினைவுநாளை முன்னிட்டு சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ஊர்வலம் நடைபெறும் சென்னை அண்ணாசாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை ஊர்வலமாக சென்று மலரஞ்சலி செலுத்தப்படும்.டிச.5ம் தேதி காலை 9.30 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்பு நடைபெறுகிறது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டது.இந்நிலையில் டிசம்பர்  5-ஆம் தேதி ஜெயலலிதா நினைவு நாள் ஏற்பாடுகள் தொடர்பாக, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று மாலை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.