சுகாதார செயலர் ராதாகிருஷ்ணனை வியாழக்கிழமை ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுக சாமி ஆணையம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பியது. டிசம்பர் 14ம் தேதி அதாவது இன்று நேரில் ஆஜராகி விளக்கம் தர ராதாகிருஷ்னனுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.
unknown nodeஇந்நிலையில் ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார்.இதன் பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை மீண்டும் செவ்வாய்கிழமை அதாவது நேற்று விசாரணைக்கு வரவேண்டும் என்று தெரிவித்தது ஆறுமுகசாமி ஆணையம்.இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு நேற்று ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், போதிய நேரமின்மையால் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணனை வியாழக்கிழமை ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.