ஜெயலலிதாவின் தனிப்பாதுகாவலர் எந்தவித முரண்பட்ட தகவலையும் தெரிவிக்கவில்லை என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனிப்பாதுகாவலர் பெருமாள்சாமி ஆஜரானார்.இதன் பின்னர் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், ஜெயலலிதாவின் தனிப்பாதுகாவலர் எந்தவித முரண்பட்ட தகவலையும் தெரிவிக்கவில்லை.ஜெயலலிதாவுக்கு மூட்டுவலி உள்ளிட்ட பிரச்னைகள் இருந்ததாக பெருமாள்சாமி கூறினார் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.