ஜெயலலிதா மரணம்....!சசிகலாவை நேரில் விசாரிக்க அனுமதி வேண்டும் ...!விசாரணை ஆணையம் கடிதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளது ஆறுமுகசாமி ஆணையம். முன்னாள்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளது ஆறுமுகசாமி ஆணையம்.

unknown node

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக உள்துறை செயலாளர் மற்றும் கர்நாடக சிறைத்துறைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம்....!சசிகலாவை நேரில் விசாரிக்க அனுமதி வேண்டும் ...!விசாரணை ஆணையம் கடிதம்