ஜெ.மரணம்: விசாரணைக்கு அழைத்தால் உண்மையை சொல்வேன்!!தேதியை ஆணையம் தான் 2 முறை தள்ளிவைக்கிறது!!துணை முதலமைச்சர் பகீர் தகவல்

ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தால் உண்மை நிலையை சொல்வேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தால் உண்மை நிலையை சொல்வேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.

unknown node

அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

unknown node

பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி  23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும் , மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை  ஜனவரி  22 ஆம் தேதியும்  ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது.

ஆனால்  சம்மனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஆனால் ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல்  2 முறை அவரது தேதி மாற்றப்பட்டது. அவர் ஆஜராகும் நாளுடன் விசாரணையை முடித்துக் கொள்வதாக ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

unknown node

இந்நிலையில் இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில்,  அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்.தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் .ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தால் உண்மை நிலையை சொல்வேன்.

விசாரணைக்கான தேதியை ஆணையம் தான் 2 முறை தள்ளிவைத்தது, அதற்கான காரணமும் எனக்கு தெரியாது.மக்களவை தேர்தலில் போட்டியிட என் மகனுக்கு முழு உரிமை உண்டு.