#JustNow: இந்தியாவில் ஒரே மொழி என்பது சாத்தியமில்லை – மலையாளத்தில் பேசிய முதல்வர்!

ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள் என்று மனோரமா நியூஸ் நடத்தும் கருத்தரங்கில் முதல்வர் உரை.

ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள் என்று மனோரமா நியூஸ் நடத்தும் கருத்தரங்கில் முதல்வர் உரை.

கேரள மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் நடத்தும் கான்க்ளேவ் கருத்தரங்கில் காணொளி வாயிலாக உரையாற்றிய தமிழாண்டு முதலமைச்சர் முக ஸ்டாலின், இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி என்பது சாத்தியம் இல்லை, ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள். வலிமையான மாநிலங்கள் இருப்பது இந்தியாவின் பலமே தவிர பலவீனம் அல்ல. இந்தியாவில் அனைவரும் மேலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 சதவீதம்.

மக்களின் அன்றாட தேவைகளையும் நிறைவேற்றும் கடமை மாநில அரசுக்கு உள்ளது. மாநில அரசுகள் தன்னிறைவு பெற்ற அரசுகளாக இருந்தால்தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும். கருத்தை தெரிவிக்கும் களமான நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை, கருத்துரிமை மறுக்கப்படுகிறது. தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட மத்திய அரசின் கொள்கைகளை மக்களுக்கு எதிரானதாக உள்ளது. இந்தியாவில் ஜனநாயகமே பொருத்தமான கொள்கை என தெரிவித்தார். தமிழ், மலையாளம் மொழிகளுக்கு இடையே ஆழமான உறவு இருக்கிறது என முதலமைச்சர் மலையாளத்திலும் உரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர், தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும் தெரிவித்தார். திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கொள்கைக்கான கூட்டணி. பிரதமர் மோடி வருகையால் திமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட போவதாக தகவல் வெளியான நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி, சிபிஎம் உடனான கூட்டணி, கொள்கை கூட்டணி, அது தொடரும் என்றும் விளக்கமளித்தார்.