ஜோ பைடன்,கமலா ஹாரிஸிற்கு கனிமொழி வாழ்த்து.!

அமேரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றியை தட்டி சென்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவில் ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார்.
இவர்களுக்கு, அணைத்து நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் திமுக கட்சி எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, ஜோபைடன் மற்றும் கமலா ஹாரிஸின் வெற்றி அனைத்து நாடுகளுக்கும் ஒரு மாற்றத்தையும் நம்பிக்கையையும் தரும், மேலும் உலகம் இன்னும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க விரும்புகிறது என்பதையும் மக்கள் வெறுப்புக்கு மேல் உயரும் என்பதையும் காட்டுகிறது.
The victory of Joe Biden and Kamala Harris will bring a change and hope to all the nations and also shows that the world still wants to be inclusive and people will rise above hate.#JoeBidenKamalaHarris2020 pic.twitter.com/iT88SGVu1g
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 8, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025