மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டுகள் சிறை.!

பயிற்சிக்கு வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2021 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

karate master - harassment

சென்னை :சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வந்த கெபிராஜ், பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், நேற்று முன்தினம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த 2021-ல் மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், 32 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி எஸ். பத்மா, கெபிராஜ்க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.