“அதிமுக போகிற போக்கே சரியில்லை” – திமுகவில் இணைந்த கார்த்திக் தொண்டைமான்.!

திமுகவில் இணைந்த புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான், அதிமுக மொத்தமாக காலியாகி கொண்டிருக்கிறது என குற்றச்சாட்டியுள்ளார்.

Karthik Thondaiman

சென்னை :முன்னாள் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான வி.ஆர். கார்த்திக் தொண்டைமான், இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இவர் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் 2012 சட்டமன்ற இடைத்தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர். எடப்பாடியின் நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்பட்டவர், கார்த்திக் தொண்டைமான் முன்னதாக காங்கிரஸ் மற்றும் திமுகவில் இருந்து 2005-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தவர் ஆவார்.

தற்போது திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம்பேசுகையில், ”இபிஎஸ் போகிற போக்கே சரியில்லை, மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவரின் வருகை புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.