கரூர் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்...தீர்ப்பு ஒத்திவைப்பு!

காவல்துறையினரின் விசாரணையில் என்ன தவறு உள்ளது? என விசாரணையின் போது தமிழக அரசு தரப்பு வாதம் செய்துள்ளது.

tvk case

சென்னை :கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரும் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விரிவான விசாரணைக்கு இடம்பெற்றுள்ளது. செப்டம்பர் 27 அன்று த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், சட்ட ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) அமைக்க உத்தரவிட்ட நிலையில், த.வெ.க. உள்ளிட்ட 5 பேர் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வு, இந்த மனுக்களை விசாரித்தது. த.வெ.க. தரப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், விஜய் மீதான உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு எதிராக வாதம் தொடங்கினார்.

விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பு, “உயிரிழந்த சிறுவனின் தந்தையின் வலி எங்களுக்குப் புரிகிறது” என்று கூறி, அனைவரின் வலியையும் அறிந்ததாக தெரிவித்தது. உயர் நீதிமன்றம்தான் SIT அதிகாரியை நியமித்தது, அரசு அல்ல என்று வாதிட்டது. அஸ்ரா கர்க் என்ற மூத்த அதிகாரி, CBI போன்ற மத்திய அமைப்புகளில் பணியாற்றியவர், சிறந்த விசாரணையாளர் என்று பாராட்டினார். மேலும், “ஒரு நபரின் வலியால் சிபிஐ மாற்றம் கோரக்கூடாது. உள்ளூர் அதிகாரிகள் கள நிலையை அறிந்தவர்கள்” என்று அரசு வலியுறுத்தியது.

CBI-க்கு வரம்பற்ற வழக்குகள் குவிந்தால் விசாரணை தாமதமாகும் என்றும் கூறியது. போலீஸ் விசாரணையில் என்ன தவறு உள்ளது? என்று நீதிமன்றம் கேட்டதற்கு, அரசு விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி கோரியது. த.வெ.க. தரப்பு, “விஜய் தப்பி ஓடவில்லை, போலீஸ் அறிவுறுத்தலால் வெளியேறினார்” என்று வாதிட்டது. கரூரில் இருந்தால் சூழ்நிலை மோசமடையும் என்று போலீஸ் கூறியதால் அவர் வெளியேறினார். போலீஸ் அலட்சியத்தால் சம்பவம் நடந்தது, போலீஸ் விசாரணைக்கு நம்பிக்கை இல்லை என்று கோரினர். “உயர் நீதிமன்றம் எங்களை பிரதிநிதிகளாக இல்லாமல் கருத்து கூறியது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

சிறுவனை இழந்த தந்தை தரப்பு, போலீஸ் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டது, போலீஸ் விசாரிக்கக் கூடாது என்று வாதிட்டது. த.வெ.க., ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் உச்ச நீதிமன்றம் SIT அமைக்க வேண்டும் என்று கோரியது.உச்ச நீதிமன்றம், “கரூர் சம்பவத்தில் உண்மை வெளியாக வேண்டும், பரஸ்பர குறைகூற முடியாது” என்று கூறியது. “தேர்தல் பிரச்சார நெறிமுறை வழக்கில் SIT உத்தரவு எப்படி? கிரிமினல் வழக்காக பதிவு எப்படி?” என்று சரமாரி கேள்விகள் எழுப்பியது.

அரசு, “41 உயிரிழப்பால் கிரிமினல் வழக்கு, பதிவாளர் உரிய நீதிபதி முன் பட்டியலிட்டார்” என்று பதிலளித்தது. கரூர் சம்பவத்தில் விஜய் 12 மணிக்கு வருவதாக கூறிவிட்டு தாமதமாக வந்ததே காரணம் என்று அரசு வாதிட்டது. தேர்தல் பரப்புரையில் ரவுடிகள் அல்லது ஆளும் கட்சி நபர்கள் களமிறக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்றும் கூறியது.த.வெ.க. தரப்பு, விஜய் தப்பி ஓடவில்லை, போலீஸ் அறிவுறுத்தலால் வெளியேறினார் என்று மீண்டும் வலியுறுத்தியது.

அதே சமயம், உயர் நீதிமன்றம் எங்களை பிரதிநிதிகளாக இல்லாமல் கருத்து கூறியது ஏன்? என்று கேள்வி எழுப்பியது. அரசு, போலீஸ் விசாரணையில் தவறு இல்லை, அஸ்ரா கர்க் சிறந்த அதிகாரி என்று வாதிட்டது. போலீஸ் அலட்சியம் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியது. உச்ச நீதிமன்றம், காவல்துறையின் விசாரணையில் என்ன தவறு உள்ளது? அதை சுட்டிக்காட்ட முடியுமா? என்று அரசை வினவியது. உச்ச நீதிமன்றம், மனுதாரர்களும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை ஒத்திவைத்தது. அரசின் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி அளித்தது. அடுத்த விசாரணை தேதி விரைவில் அறிவிக்கப்படும்.