கரூர்:தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தரப்பு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. இந்த வீடியோவில், தமிழ்நாடு ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்., சம்பவத்தின் காரணங்கள், போலீஸ் ஏற்பாடுகள், இடத் தேர்வு ஆகியவற்றை விவரித்துள்ளார்.
இந்த துயரமான சம்பவத்தில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இப்படியான சூழலில், அமுதா வீடியோவில் கூறுகையில், “தவெகவினர் முதலில் லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் அனுமதி கோரினர். அங்கு ஒரு பக்கம் பெரிய பெட்ரோல் பங்க், மறுபக்கம் அமராவதி ஆறு மற்றும் பாலம் உள்ளன. இவ்வளவு பெரிய கூட்டத்தை நடத்த முடியாது என விளக்கினோம். இரண்டாவது, உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம், 5,000 பேர் மட்டுமே திரள முடியும். எனவே, அண்மையில் அதிமுக 10,000-15,000 பேர் கூடிய வேலுச்சாமிபுரத்தை பரிந்துரைத்தோம். தவெகவினர் இதை ஏற்று, மனு கொடுத்து அனுமதி பெற்றனர்,” என்று தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் “தவெகவின் ‘சதி’ குற்றச்சாட்டுக்கு வீடியோ ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவித்துள்ளார். “தவெக தரப்பு 10,000 பேர் வருவார்கள் என்று கடிதம் அனுப்பியது. முந்தைய கூட்டங்களை வைத்து 20,000 பேர் வரலாம் என்று கணித்து, 20 பேருக்கு ஒரு காவலர் என விகிதத்தில் 500 போலீஸார் அமர்த்தப்பட்டனர். பொதுவாக 50 பேருக்கு ஒரு காவலர் என்பது நடைமுறை. கூட்ட நெரிசல் தகவல் கிடைத்தவுடன் ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, விஜய் பேசும்போது மின்தடை இல்லை. தொண்டர்கள் மரங்கள், மின்கம்பங்களில் ஏறியதால் பாதுகாப்பிற்காக சிறிது நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. போலீஸ் உதவியுடன் இறக்கிய பிறகு மீண்டும் வழங்கப்பட்டது. தவெகவின் மின்தடை கோரிக்கை செப்டம்பர் 26 அன்றே நிராகரிக்கப்பட்டது,” என்று வீடியோவில் விளக்கம் அளித்தார்.
இந்த வீடியோ, தவெகவின் சதி குற்றச்சாட்டுக்கு வீடியோ ஆதாரங்களுடன் மறுப்பாக அமைந்துள்ளது. “ஜெனரேட்டரை சுற்றிய தகடுகளை தவெகவினர் பிரித்துச் சென்றதால் பாதுகாப்பிற்காக மின்சாரம் நிறுத்தப்பட்டது. தவெக துண்டு அணிந்தவர்தான் ஜெனரேட்டரை ஆஃப் செய்தனர்,” என்று அமுதா விளக்கம்அளித்தார் அளித்தார். கூட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதாக பரவும் வதந்திக்கு, “விஜய் வாகனம் கூட்டத்திற்குள் நுழைய முடியாத அளவு நெரிசல் இருந்தால், போலீஸார் கூட்டத்தை விலக்கினர். டி.எஸ்.பி. எச்சரித்தும் தவெகவினர் ஏற்கவில்லை,” என்று ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.
