கோடநாடு விவகாரம் – கார் உரிமையாளரிடம் விசாரணை!

The trial is in full swing as the courts have refused to stay the trial in the Kodanad murder and robbery case.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணை தீவிரம்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய காரின் உரிமையாளர்கள் உட்பட இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காரின் உரிமையாளர் நவசாத், புரோக்கர் நவ்ஃபல் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே, கோடநாடு சம்பவம் நடந்தபோது தப்பித்தவர்களை கூடலூர் சோதனை சாவடியில் பிடித்த, நீலகிரி காவலர் சத்யன், ஆய்வாளர் மீனாகுமாரிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.