மதுக்கடைகளை மூட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
இதுதொடர்பாக பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், குடிகளைக் கெடுக்கும் குடி சட்டம் ஒழுங்கையும், அமைதியையும் சிதைக்கத் தொடங்கியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் மது விற்பனை மோதலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது. தமிழ்நாட்டில் மதுவால் ஏற்படும் தீமைகள் மற்றும் சீரழிவுகள் குறித்து யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மதுப்பழக்கத்தால் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர் என குறிப்பிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025