மக்களவை தேர்தல் 2019:இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்

this news gives information about Lok Sabha Election 2019: Final day to file nominations today

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.மக்களவை தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் இன்று ( மார்ச் 19-ஆம்  தேதி) தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம்  தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேர்தல் ஆணையம் அறிவித்த முதலே தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.அதேபோல்  அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டது.

மக்களவை தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் கடந்த  மார்ச் 19-ஆம்  தேதி தொடங்கியது.இந்நிலையில் இன்று (மார்ச் 26-ஆம் தேதி)தான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.இதனால் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று உறுதியாக செய்ய வேண்டும்.