48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

The Meteorological Department said a low pressure area was expected in the next 48 hours.

அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்பொழுதும் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரும் எனவும், இதன் காரணமாக வருகிற 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.