புதிய தலைமை செயலகம் கட்டிய வழக்கில் விரைவில் ஸ்டாலின் சிறை செல்வார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
unknown nodeதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி, திமுக முன்னாள் அமைச்சர்களும் சிறை செல்வார்கள்.சட்டமன்ற விதிமீறல் வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தகுதி நீக்கம் செய்யப்படக் கூட வாய்ப்புள்ளது. கொளத்தூர் தொகுதி தேர்தலில் விதி மீறிய வழக்கில், ஸ்டாலின் பதவி இழக்கும் நிலை விரைவில் வரும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.