புத்தாண்டு கொண்டாட்டம் – கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழ்நாடு காவல்துறை!

The Tamil Nadu Police has announced various restrictions ahead of the English New Year.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு காவல்துறையின் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, மீறினால் கைது செய்யப்பட்டு கைது செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூர பயணிப்போர் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளக்கூடாது. 31-ஆம் தேதி இரவு முதல் 1-ஆம் தேதி அதிகாலை வரை பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கபடுகிறது. மேலும் வீட்டில் இருந்தே புத்தாண்டை வரவேற்போம் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

unknown node