ஐஜி பொன் மாணிக்கவேல் மீது உயர்நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் கோயில்களில் உள்ள சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளையும் வழங்கி இருந்தது.
unknown nodeஇந்நிலையில் ஓய்வு பெறும் நிலையில் உள்ள தம்மீது வழக்கு தொடர சிபிசிஐடி திட்டமிருப்பதாக பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை முன்வைத்தார்.அவரது குற்றச்சாட்டை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்றத்தின் அனுமதியின்றி பொன்.மாணிக்கவேல் உள்ளிட்ட சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.தொடர்ந்து விசாரணை நவம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.