“யாராலும் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிட முடியாது” – இபிஎஸ்.!

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒப்பிட்டு, தவெக தலைவர் விஜய்யை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

eps - vijay

சென்னை :மதுரையில் நடந்த தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டில், பாசிச பாஜகவுடன் அடிமைக் கூட்டணி வைத்திருப்பதாக அதிமுகவை தவெக தலைவர் விஜய் மறைமுக சாடினார். இந்நிலையில், விஜய் அறியாமையில் பேசுவதாக இபிஎஸ்கூறியுள்ளார். யாராலும் கட்சி தொடங்கியதும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது என்றும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வந்த உடனேயே முதல்வராகவில்லை எனவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.

மதுரையில் நடந்த தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய், அதிமுக குறித்து பேசிய கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக, எடப்பாடி பழனிசாமி, “ அதிமுக யார் கையில் இருக்கிறது என்று சிலர் அறியாமையில் பேசுகின்றனர், எடுத்த உடனே எல்லாம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.

எடுத்த உடனே ஹீரோ ஆக முடியாது, செடி உடனே கனி தராது. உழைப்பைக் கொடுக்க வேண்டும். திரைப்படத்தில் வருமானம் பெற்று, ஓய்வு பெறும் காலத்தில் அரசியலை தொடங்கியவன் நானல்ல, அதிமுக-வை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது,

இப்போது அதிமுக யார் கையில் இருக்கிறது என்று சிலர் பேசுகிறார்கள். பாவம், அறியாமையின் காரணமாக பேசுவதாக நான் பார்க்கிறேன். இது கூட தெரியாமல் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார் என்று சொன்னால், அவரை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்?” என்று கூறினார்.