நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் அறிவிப்பு.
புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் தாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்வது சட்டவிரோதம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
புகார் கொடுத்தால் காலத்தில் நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.மக்கள் நலன் கருது அரசு அதிகாரிகள் தங்களது கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் தெரிவித்தார்.