"25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர்" மாவட்டச் செயலாளர்களுக்கு தவெக உத்தரவு.!

தவெக தலைவர் விஜய் தன்னுடைய அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் முன் ஒன்றிய செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Featured image

சென்னை :தமிழக வெற்றிக் கழகத்தில் 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளரை நியமனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பனையூரில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் தன்னுடைய அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் முன் ஒன்றிய செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், நடிகர் விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு முன்பாக அமைப்பை விரிவுபடுத்தவும் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு ஒன்றிய செயலாளர் இருந்த நிலையில், தொகுதி வாக்குச்சாவடி அடிப்படையில் ஒன்றிய செயலாளர் பதவியை பிரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்குள் ஒன்றிய செயலாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 17க்கு பிறகு இந்த சுற்றுப்பயணம் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.