சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடி நடந்ததாகவும், இதில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. இந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை, டாஸ்மாக் பணமோசடி வழக்கு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனின் சென்னை அல்வார்பேட்டையில் […]
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்து நடவடிக்கை பயணிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த 4 விமானங்களும், சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்களும் உட்பட மொத்தம் 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் டெல்லி, மும்பை, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படவிருந்தவை. குறிப்பாக, ஏர் இந்தியாவின் ஒரு […]
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் ‘உலக அகதிகள் தினம்’ என அனுசரிக்கப்படுகிறது. போர், மோதல் அல்லது துன்புறுத்தல் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நபர்களுக்காக, இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உலக அகதிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வறுமையை ஒழிப்பதில் ஐரோப்பிய நாடுகளை முந்திய தமிழ்நாடு என்றும், நிதி ஆயோக் அறிக்கையை சுட்டிக் காட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், […]
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சன் டிவி பங்கு தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கலாநிதிக்கு தயாநிதி நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், இப்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் உரிமையாளர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஆம், சகோதரர் […]
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக செயல்படும் 82 மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், அதிமுக தனது கட்சி அமைப்பை வலுப்படுத்தவும், தொண்டர்களை திரட்டவும் தொடர்ந்து மாவட்ட அளவிலான கூட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கழக வளர்ச்சி பணிகள் குறித்து […]
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற 10 வயது சிறுமி நேற்றைய தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், காவல்துறையின் மீது விமர்சனங்களையும் எழுப்பியது. மேலும் இந்த விபத்து, சென்னையில் கனரக வாகனங்கள் பள்ளி நேரங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், சென்னையில் விபத்தின் மூலம் உயிரிழப்பை […]
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியதாகக் கூறப்படும் நித்யானந்தா, “கைலாசா” என்ற பெயரில் ஒரு தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார். இந்த “கைலாசா” நாடு எங்கு உள்ளது, அதன் சட்டபூர்வ நிலை என்ன என்பது குறித்து தெளிவான தகவல்கள் இதுவரை இல்லை, […]
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி பதவிக்கான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ், தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் “100% பொய்யானவை” என்று கூறியுள்ளார். தற்பொழுது, சேலத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, சேலம் எனக்கு பிடித்த மாவட்டம், நான் படித்த மாவட்டம். பா.ம.க. தனித்துப் போட்டியிட்ட போது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த மாவட்டம். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு […]
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், ஆகியோர் நேற்றைய தினம் உடல்நலக் குறைவு எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று (ஜூன் 19) சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, “பாமக சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருவரும் பூரணமாக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் குணமடைய வேண்டும் என […]
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள் மற்றும் குழப்பங்களுக்கு திமுக காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ராமதாஸ், சென்னையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அன்புமணி கூறிய குற்றச்சாட்டு ஒன்றை மறுத்து, அதனை “அப்பட்டமான பொய்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை […]
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று ராமதாஸ், தான் மீண்டும் கட்சியின் தலைவர் என்றும், அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மாமல்லபுரத்தில் மே 11 அன்று நடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டில் ராமதாஸ், அன்புமணியை மறைமுகமாக விமர்சித்தார். பிறகு, ஜூன் 13 அன்று ராமதாஸ், “என் மூச்சுக்காற்று இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்,” […]
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த 10 வயது பள்ளி மாணவி சௌமியா உயிரிழந்த சம்பவம் இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. சௌமியாவை அவரது தாயார் யாமினி இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, பள்ளி அருகே பொதுப்பாதையில் வந்த கனரக லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் சௌமியா தூக்கி வீசப்பட்டு சம்பவ […]
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது மவுண்ட்-பூனமல்லி சாலையில் உள்ள L&T தலைமை அலுவலகம் அருகே, இரண்டு I-கிர்டர்கள் (ஒவ்வொன்றும் 75 டன் எடை கொண்டவை) திடீரென இடிந்து விழுந்தன.இந்த விபத்தில், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சி. ரமேஷ் (43), பில்லிங் மெஷின் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜினியராக பணிபுரிந்தவர், தனது இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, கான்கிரீட் கிர்டர்களுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு மனைவி […]
சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல் மற்றும் இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி தூண்டிய வழக்கில், தமிழகத்தில் சென்னை, கோவை, மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நான்கு பேரை கைது செய்தது. இந்த வழக்கு, 2022 அக்டோபர் 23 அன்று கோவையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக உள்ளது. இதுவரை இந்த வழக்கில் மொத்தம் […]
சென்னை : நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து,நேற்று (18-06-2025) காலை 05.30 மணி அளவில் மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது இன்று மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஜார்க்கண்ட் வழியாக நகரக்கூடும். அதே சமயம், தமிழகத்தில் இன்று 4 […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (AITUC) அறிவித்துள்ளது. தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கம் பங்கேற்கின்றனர். டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். வரும் அக்டோபர் 2ம் தேதி காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை துவங்குவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் நீண்ட காலமாக […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, “கீழடி ஆய்வு முடிவுகள் பாஜகவின் புராணக் கதைகள் அல்ல, அறிவியல் பூர்வமான ஆதாரங்களால் தொகுக்கப்பட்டவை” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 2014ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது. 2014இல் கீழடியில் அகழாய்வு செய்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர், அகழாய்வில் கிடைக்கப் […]
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமான ஆதாரங்களாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக்கில் மதுபான கொள்முதல், பார் உரிமங்கள் வழங்குதல், மதுபான போக்குவரத்து டெண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ரூ.1000 கோடி மதிப்பிலான முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த முறைகேடுகளில் சில முக்கிய […]
சென்னை : சென்னை – டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு 7.10க்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானமும், சென்னையில் இருந்து இரவு 8.40மணிக்கு செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது. பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு நிர்வாக காரணங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாற்று விமானங்களைத் தேர்வு […]
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சபாநாயகரை சந்திக்க தலைமைச் செயலகம் வந்தபோது அருளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, அருள் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம், தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி நாளை கூட்டும் நிலையில் இருவரும் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.