மதுரை : உசிலம்பட்டி அருகே அத்திப்பட்டியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிகழ்வு முடிந்து திருமங்கலம் நோக்கி திரும்பியுள்ளார். உடன் அதிமுக கட்சி பிரமுகர்களும் வந்துள்ளனர். அப்போது, மங்கல்ரேவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, ஒரு கும்பல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காரை வழிமறித்துள்ளனர். அவர்கள், அமமுக கட்சியினர் என்பதும், அமமுக தலைவர் டி.டி.வி.தினகரனை ஆர்.பி.உதயகுமார் தவறாக பேசியதால் அவரது காரை வழிமறித்ததாகவும் கூறப்படுகிறது. […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்குமா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த இபிஎஸ், “ஒன்றை நல்லா புரிஞ்சுக்கணும். அரசியல் சூழலை பொறுத்துதான் கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் நெருங்கும் போதுதான் அது முடிவு செய்யப்படும்” என்றார். இது பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதை மறைமுகமாக சொல்வதாக உள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது […]
சென்னை : வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இன்றுடன் பரப்புரை நிறைவடையுள்ள நிலையில், தங்கை பிரியங்காவுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி காரணமாக, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அடுத்த 2 தினங்களில் தமிழகம் நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கணிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் […]
சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நாளை (நவம்பர் 12) முதல் பருவமழை தீவிரம் அடைகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ.11) நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், சென்னையில் நாளை மறு தினம் (நவ. 13) முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை 9 மாவட்டங்களில் கனமழை […]
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக தேமுதிக உயர்மட்ட குழுக்கள் தீவிர ஆலோசனை செய்து வருகிறது. இதில் ஒரு பங்காக இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டமானது சென்னையில் உள்ள கோயம்பேட்டில் நடந்தது. இதில் முக்கியமான 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அந்த 10 தீர்மானங்கள் என்னெவென்றால் …, தமிழகம் முழுவதும் உள்ள நமது கழகத்தினரும், பொதுமக்களும் ஒன்று […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர் (11/11/2024) திங்கள்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். கோவை எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர் மன்னம்பாளையம், வோலைபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம் ஈரோடு சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், […]
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவரான டெல்லி கணேஷ், வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் சினிமா முற்றிலும் சோகத்தில் இருந்து வருகிறது. திரைத்துறையில் மட்டுமே 40 வருடங்கள் பயணித்து, பல கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடம் நீங்கா இடம் பிடித்து மனதளவில் வாழ்ந்து வருகிறார். அன்னாரது மறைவிக்கு திரைப்பிரபலன்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பலரும் சமூக தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, முன்னதாக தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் […]
சென்னை : இன்று தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், மின் சாரக்கட்டணம் உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், தமிழக மக்களுக்காக கேப்டன் கொண்ட லட்சியத்தை நிறைவேற்றிட வேண்டும் என உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பொதுச்செயலாளர் பிரேமலதா அதிமுகவுடனான கூட்டணி குறித்தும் தேமுதிக மாநாடு நடத்துவது பற்றித் திட்டமிட்டது குறித்தும் பேசியுள்ளார். இது குறித்துப் பேசிய […]
சென்னை : கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் […]
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு காலமானார். அன்னாரது மறைவுக்கு சின்னத்திரைக் கலைஞர்கள், சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில், டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த இரங்கல் செய்தியில், “மூத்த திரைக்கலைஞர் […]
சென்னை : அரசு முறைப் பயணமாக 2 நாள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வை நேற்று தொடங்கினார். நேற்று கன்னிச்சேரிபுதூர் பட்டாசு ஆலையில் கள ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, இன்று குமாரசாமி ராஜா நகரில் ₹77.12 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை […]
விருதுநகர் : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அத்தியாவசியமற்ற செலவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்து வருவதாக விமர்சித்துக் கூறியிருந்தார். அது மட்டுமின்றி அந்த அறிக்கையில் “போதிய நிதி இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. மு.க. ஸ்டாலின், அவரது தந்தை பெயரை அரசு கட்டிடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை […]
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் இந்த அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, சுமார் 2.06 லட்சம் சதுரடி பரப்பில் 6 தளங்களுடன் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வந்தது. தற்போது கட்டிட பணிகள் முடிந்து 2 வருடங்களுக்கு பிறகு இந்த அலுவகம் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை […]
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம், நவம்பர் 2-வது வாரத்தில் அதிகமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் , தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம் & யானம், ராயலசீமா, கேரளா & மாஹே ஆகியவற்றில் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையமும் […]
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர். தவெக மாநாட்டில் தமிழ் தேசியமும், திராவிடமும் இரு கண்கள் எனக் கூறியதால், திராவிட கொள்கையை தூக்கி பிடிப்பது யாராக இருந்தாலும் தனக்கு எதிரி என விஜய்யை சீமான் கடுமையாக விமர்சித்திருந்தார். இவ்வாறு, விஜய்யை சீமான் தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களை பதிவு செய்தார். எனினும் சீமானை இகழ்ந்து பேசக்கூடாது என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், […]
கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில் பூமியின் 5 கி.மீ ஆழத்திற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சென்னை வானிலை ஆய்வகம் நிலநடுக்கத்தை உறுதி செய்தது. இந்நிலையில், பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு, வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்ததாகவும், ஆனால் உயிர் சேதம் […]
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், கரூர், ஈரோடு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. Nowcast for 09.11.2024 pic.twitter.com/lBauljoTGn — tnsdma (@tnsdma) November […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், ” இரண்டாயிரத்து ஐம்பத்து மூன்று (2153) காவலர்கள், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மாற்றப்பட்டு, அவர்களின் கோரிக்கையின் பேரில் ஒவ்வொருவருக்கும் […]
சென்னை : வரும் டிசம்பர் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட விகடன் பதிப்பகம் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் (விசிக துணை பொதுச்செயலாளர்) நிறுவனமும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிகழ்வு குறித்த பேச்சு தான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. இந்த நிகழ்வில் முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட இருந்தார். அப்போது விழா […]