சென்னை : திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாள், தந்தை பெரியார் பிறந்த தினம் , அறிஞர் அண்ணா பிறந்தநாள் என இன்று திமுக முப்பெரும் விழாவானது சென்னை ஒய்.எம்.சி.ஆர் மைதானத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இந்த முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இதில், மேடையில் இரண்டு பெரும் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு இருக்கையில் திமுக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அமர்வார் என அனைவருக்கும் […]
சென்னை : கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேருக்குக் காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டிருப்பதாகவும் அவர்களைத் தனிமைப்படுத்தி அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே, கேரளா பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு எல்லைக்குள் ‘நிபா வைரஸ்’ நோய் […]
சென்னை : திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவை இல்லை எனவும் தேசிய சாயலில் தான் தமிழ்நாட்டில் கட்சி வர வேண்டும் எனவும் தமிழிசை சவுந்தராஜன் பேசி இருக்கிறார். முன்னதாக சென்னை, தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழிசை பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் தவெக கட்சி தலைவரான விஜயையும் விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து […]
சென்னை : எழும்பூர் அருகே வேப்பேரி பகுதியில் உள்ள பெரியார் திடல் சென்று தன்னை ஒரு முழு அரசியல்வாதி என நிரூபித்துள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். ஆம், கட்சி அறிவிப்புக்கு பின் முதல்முறையாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு விஜய் தனது காரில் ஏறி செல்வதற்கு முன், திமுக ஆதரவாளர், பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பொதுவெளியில் தலைவர் ஒருவரின் சிலைக்கு விஜய் மரியாதை […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 19.09.2024) வியாழன் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..! கோவை சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர் கடலூர் சிற்றரசூர், முத்துகிருஷ்ணாபுரம், […]
சென்னை : பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி, தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். சாதி, மத ஆதிக்கம், மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர் பெரியார் என்று நினைவுகூர்ந்தார். பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ் என்று போற்றப்பட்ட அவரது பிறந்தநாளில், சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்றும் வலியுறுத்தினார். இது தொடர்பாக விஜய் தனது அறிக்கையில், ” சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த […]
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக வெற்றி க் கழகம் கட்சியுடன் 2026 தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு , ” நான் தனித்து தான் போட்டியிடுவேன். என்கூட சேர வேண்டும் என நினைப்பவர்கள் தான் அதனை முடிவு ” செய்ய வேண்டும் என விஜய் பெயரை கூட குறிப்பிடாமல் சீமான் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். இதுநாள் வரையில், தம்பி விஜய் எனக் கூறிக்கொண்டிருந்த சீமான், […]
சென்னை : திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று (செப்டம்பர் 17) திமுக பவள விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் வெகு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தந்தை பெரியார் பிறந்த தினம் , அறிஞர் அண்ணா பிறந்த தினம், திமுக தொடங்கிய நாள் என முப்பெரும் விழாவாக இந்த விழா நடைபெற உள்ளது. திமுக கட்சியானது அறிஞர் அண்ணாவால், 1949ஆம் ஆண்டு […]
சென்னை : பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பிரதமராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் தனது 74-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில், தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தவெக தலைவர் விஜய், பாமக நிறுவனர் ராமதாஸ் என மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரும் வாழ்த்துகளைத் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ தேதியை தவெக தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், அக்.15இல் மாநாடு நடைபெறும் என்று பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டுள்ளது. ஏற்பாடுகள் முழுமை அடையாததால், செப்.23 நடபபதாக இருந்த மாநாடு அக்டோபருக்கு தள்ளிப் போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், விக்கிரவாண்டி அருகேயுள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில் தவெக தொண்டர்களால் அக்.15 என […]
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க சாவடியிலும் சுங்க கட்டணமானது உயர்த்தப்பட்டது. வாகனத்தின் வகையை பொறுத்து ரூ.5 முதல் ரூ.120 வரையில் உயர்த்தப்பட்டது. சுங்கக்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் இன்று (செப்டம்பர் 16) போராட்டம் நடைபெறும் என் முன்னதாக அறிவிக்கப்ட்டது. அதன்படி, செங்கல்பட்டில் பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ம.ம.க கட்சித்தலைவர் ஜவார்ஹிருல்லா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் […]
கோவை : கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திமுக வாக்குறுதிகளில் கோவையில் முக்கிய வாக்குறுதியாக, அங்கு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்பதாகும். இதற்கான நடவடிக்கையில் திமுக அரசு உடனடியாக களமிறங்கியது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் உடனடியாக தேர்வு செய்யப்பட்டது. அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். கோவை ஒண்டிபுதூர், L&T நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 18.09.2024) புதன் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..! கோவை கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர் தண்ணீர்பந்தல், […]
சென்னை : விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு இதற்கு முன் அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். மேலும், அக்டோபர்-2 ம் தேதி நடைபெற உள்ள இந்த மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுகவும் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு தற்போது திருமாவளவன், திமுக இந்த மாநாட்டில் பங்கேற்கிறது என தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் சந்தித்து அழைப்பு விடுத்த பிறகு […]
சென்னை : விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது, தனது கட்சிக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “ஆட்சியிலும் பங்கு , அதிகாரத்திலும் பங்கு” என பேசியது, மதுரையில் விசிக கொடி கம்பம் அகற்றப்பட்டு பின்னர் அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் என விசிக – திமுக இடையே ஓர் விரிசல் போக்கு நிலவியதாக கூறப்பட்டது. இப்படியான சூழலில் தான், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். இந்த சந்திப்பானது […]
சென்னை : தற்போதைய தமிழக அரசியலில் தலைப்புச் செய்தியாக மாறி இருப்பது ‘விசிக – திமுக’ கூட்டணி தான். விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சி சார்பாக நடத்தவுள்ள மதுஒழிப்பு மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ளலாம், விருப்பம் இருந்தால் அதிமுகவும் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்து இருந்தார். திமுக கூட்டணியில் உள்ள விசிக, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது. திமுக – விசிக கூட்டணியில் விரிசல் என பலரும் பேசிக்கொண்டு இருக்க, […]
சென்னை : தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தொடர் விடுமுறை எதிரொலி காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அ லைமோதுகிறது. முன்பதிவு செய்யப்படாத பேருந்துகளில் ஏற பயணிகள் முண்டியடிக்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளால் நாளை (15.09.2024) காலை […]
சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சியில், பேச்சாளர் மகா விஷ்ணு ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றிய சர்ச்சை கருத்துக்களையும், மாற்றுத்திறனாளிகள் குறித்து கடுமையான கருத்துக்களையும் பேசியிருந்தார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகா விஷ்ணு விமர்சனம் செய்திருந்தார். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த மாகா விஷ்ணு பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு […]
சென்னை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை வந்திருந்தார். அப்போது சிறுகுறு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் அன்னப்பூர்ணா சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தது முதல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு வரையில் சமூக வலைதளத்தில் டாப் ட்ரெண்டில் இருக்கிறார் நிர்மலா சீதாராமன். ஸ்வீட் – காரம் : கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவையில் நடைபெற்ற சிறுகுறு, நடுத்தர மற்றும் ஹோட்டல் தொழிலதிபர்கள் உடனான […]
மதுரை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்ட போது, அக்கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை, K.புதூர் பகுதியில் முதல் முதலாக அக்கட்சி கொடியை ஏற்றினார். அப்போது 20 அடி உயர கம்பத்தில் இந்த கட்சிக் கொடி பறக்கவிடப்பட்டது. இக்கட்சி கொடி கம்பமானது, அண்மையில் புதுப்பிக்கப்பட்டு அதன் உயரம் 20 அடியில் இருந்து 62 அடியாக உயர்த்தப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது. 62 அடியாக உயர்த்திய கொடி மாநகராட்சியில் கம்பத்திற்கு உரிய அனுமதி வாங்கவில்லை எனக்கூறி, நேற்று நள்ளிரவு 1 […]