எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தியவர் கொரோனாவை விட மோசமான விஷக்கிருமிகள் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கண்டனம் தெரிவித்தார். எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்திய செயலுக்கு அதிமுக பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நேற்று முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பழனிச்சாமி நேற்று தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். இந்தநிலையில், தமிழக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். […]
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.இதனிடையே புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.இவருக்கு புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 3 நாட்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் சட்டப்பேரவையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. பின் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் சட்டமன்ற […]
இன்று உயிரிழந்தவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண் கொரோனாவால் உயிரிழப்பு. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 89 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் பலி எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 89 பேரில், தனியார் மருத்துவமனையில் 23 பேரும், அரசு மருத்துவமனையில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு கடந்த 17-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது […]
தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காசிமேடு மற்றும் கடலூர் போன்ற அதிகம் மீன் விற்பனை செய்யும் இடத்தில குவிந்த பொதுமக்கள். கொ ரானா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில், தமிழகம் முழுவதும் தற்போது ஆறாவது கட்டமாக அடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அதிகம் வெளியில் நடமாட கூடிய நாளாகிய இந்த நாளில் அமரர் ஊர்தி, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,409 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]
சென்னை மாவட்டத்தில் தனது மனைவியை கடிக்க வந்த நாயை ஆத்திரத்தில் அடித்து கொன்று சாக்குப்பையில் கட்டி குப்பை தொட்டியில் வீசிய கணவர் சென்னையில் வசித்து வந்தவர் துரைராஜ் இவர் சென்னை பீர்க்கன்கரணை காவல் நிலையத்தின் அருகில் மளிகை கடை ஒன்றை நடத்திவருகிறார் இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு இவர் தெருவில் சுற்றித் திரிந்த நாய் ஒன்றை அடித்து கொன்று சாக்குப்பையில் கட்டி அங்குள்ள குப்பை தொட்டி ஒன்றில் வீசியுள்ளார். மேலும் அவர் நாயை கொன்றது, […]
இன்று தமிழகத்தில் புதிதாக 6,988 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 6,988 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 2,06,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 7,758 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 1,51,055 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,329 பேர் பாதிக்கப்பட்டனர். […]
குணமடைந்தோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று மட்டும் 64,315 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 22,87,334 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று மட்டும் 61,729 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.தற்போது வரை கொரோனாவுக்கு 52,273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 7,758 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1,51,055 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் […]
சென்னையில், இன்று ஒரே நாளில் 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 93,537 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 77,625 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,923 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மூன்று நாட்கள் பேரவை கூட்டத்தில் இவர் கலந்துகொண்டுள்ளார். மேலும் கதிர்காமம் சட்டமன்ற உறுப்பினர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் சட்டசபை அமர்வு மீண்டும் திறந்தவெளியில் நடைப்பெற்றது. இந்நிலையில் புதுச்சேரி […]
கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை எவ்வித தளர்வுகளும் இன்றி முழுஊரடங்கு தற்போது அமலுக்கு வந்ததுள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் 31.7.2020 வரை தேவையான தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5..7.2020 மற்றும் 12 .7.2020 மேலும் 19.7.2020 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகளும் குணமடைந்து […]
மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, ஆப்பிள் நிறுவனம், தனது ஐ போன் 11 மாடலை சென்னையில் உள்ள தனது பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தாயாரிக்கவுள்ளது. இந்தியாவில் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ், பல நிறுவங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதில் ஒரு பங்காக, உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனது குறிப்பிட்ட சில ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தாயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், […]
ஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கப்படுவது தொடர்பாக சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்தார்.இதனை தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து. நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இதனிடையே , வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வறுமையால் பூவிற்ற பள்ளிக்குழந்தைகளுக்காக 1லட்சம் நிதி திரட்டி கொடுத்துள்ள திமுக எம்பிக்கு குவியும் பாராட்டுக்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதமலை சாலையில் சபீர் என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் இணைந்து தனது பூ விற்கும் தொழிலை நடத்தி வந்துள்ளார். இவர் பூவை எடுத்துக் கொடுக்க குழந்தைகள் சாலையோரம் செல்லும் வாகன ஓட்டிகளிடம் சென்று பூக்களை விற்று வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடந்தாலும் எப்படி கல்விக் கட்டணம் செலுத்துவது என வழி தெரியாமல், […]
தென்காசியில் வனத்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், ராவணசமுத்திரத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. அவர், அரசின் விதிகளை மீறி, தனது விளைநிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்தார். தகவல் அறிந்த கடையம் பகுதி வனத்துறை அதிகாரிகள் விவசாயி முத்துவை கடையம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்தனர். அதன்படி, அவரும் ஆஜராகினார். அப்பொழுது அவர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவரை கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
காய்ச்சல் முகாம்களையும் நடத்த வேண்டும். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்று மாலை தலைமைச் செயலர் கே.சண்முகம், சென்னை தவிர இதர மாவட்டங்களின் ஆட்சியர்கள், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகளுடன் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திரரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். மதுரை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தென்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது நீலகிரி, கோவை, போன்ற மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் அறிவித்துள்ளது. மேலும் சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், டாக்டர் ராமதாஸ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, அவரது கட்சி தொண்டர்கள், கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வண்ணம், அங்கங்கு மரக்கன்று நட்டு சிறப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், டாக்டர் ராமதாஸ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு […]
முதன்முதலில் அழகு தமிழில் அறிவிப்பு வெளியிட்ட கேப்டன். இந்தியாவில் தற்போது விமானங்களில் அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் பறக்கும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்யவேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்துவருகிற நிலையில், வடசென்னையைச் சேர்ந்த பிரிய விக்னேஷ் என்பவர், இண்டிகோ விமானத்தில் கேப்டனாக இருக்கிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து மதுரை சென்ற விமானத்தில், தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற […]