சென்னையில், இன்று ஒரே நாளில் 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 92,206 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 76,494 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,743 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக அரசு கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர். தமிழகத்தில் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.மொத்தமாக தமிழகத்தில் 2 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள […]
பாலியல் குற்றவாளிக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு. இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாக தான் உள்ளது. இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு, பள்ளிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம், 19 வயது பெண் ஒருவர், ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஒருவாரத்தில் திருப்பி தந்து விடுவதாக கூறிய நிலையில், பணத்தை திருப்பி தரமுடியவில்லை. இதனையடுத்து, அந்த பெண்ணை அழைத்த சிவக்குமார், மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். மேலும், தனது நண்பர் ரவி […]
பாதுகாப்பு கலந்த சுகாதாரத்துக்காக டெட்டோல் நிறுவனத்துடன் சென்னை பி.வி.ஆர் திரையரங்கம் இணைந்துள்ளது. சென்னையின் பிரபலமான திரையரங்காகிய பிவிஆர், சினிமா திரை உலகில் உள்ள விருந்தினர்களுக்கு மேம்பட்ட சுத்தம் மற்றும் சுத்திகரிப்பு நெறிமுறைகளை நாடு முழுவதிலும் 70 நகரங்கள் மற்றும் 175 இடங்களில் செயல்படுத்துவோம் என அண்மையில் உறுதி எடுத்துக்கொண்டது. இந்நிலையில் சுகாதாரத்திற்காக தற்பொழுது இவர்கள் டெட்டால் கிருமிநாசினி நிறுவனத்துடன் உடன் கூட்டு சேர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையையும் சுகாதாரமான அணுகுமுறையும் கொண்டுள்ளதால், […]
பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரத்திற்குள் முடிவெடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சேலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பரோல் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்கும்போது, பரோலில் விடுதலையில் செல்லும் கைதிகளுக்கு பாதுகாப்பாக செல்லும் காவல்துறையினர் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு நீதிபதி, கைதிகளிடம் பரோலில் பணம் வாங்கினால் அதுவும் லஞ்சம் தான் என கூறினர். இதுபோன்ற […]
புதுச்சேரி எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நேற்று காவித்துண்டு அணிவித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அங்கிருந்து சென்றனர். மேலும், இது தொடர்பாக அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தமிழக முதலமைச்சர் […]
நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவரிடம், நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்கள் செய்தியாளர்கள்.இது குறித்து ஜெயக்குமார் கூறுகையில், இது குறித்து கட்சி தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினி எந்த அடிப்படையில், இ-பாஸ் பெற்றார் என்பதை ஆய்வு செய்தால் தான் தெரியும் என ஜெயகுமார் கூறினார். பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி […]
மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் மூடல். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 22-ந்தேதி காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் உள்ள அதிகாரிகளில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு […]
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என்றும் தற்போதைய சூழலில் மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் உள்ளது, பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே, புதிய தேதிகள் அறிவிக்கப்படும் […]
முதியவர் உயிரிழந்த வழக்கில் தமிழக தலைமை வனக்காவலர் 4 வாரத்திற்குள் உரிய பதிலளிக்கக்கோரி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. 74 வயதாகும் இவர், விவசாயம் பார்த்து வருகிறார். அவரின் வயலில் கடந்த சில தினங்களாகள் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்த நிலையில், அரசின் விதிகளை மீறி, தனது விளைநிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்தார். இதுகுறித்து கடையம் பகுதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, விவசாயி முத்துவை கடயம் […]
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த காட்டுமிராண்டித்தனம், கடுமையாக கண்டிக்கத்தக்கது என தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் எம்ஜிஆர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு நேற்று காவித்துண்டு அணிவித்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அங்கிருந்து சென்றனர். மேலும், இது தொடர்பாக அம்மாநில […]
மூன்று மகன்கள் இருந்தும் முதிய தம்பதி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பட்டியை சேந்தவர் குணசேகரன், இவருடைய மனைவி செல்வி, இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர், முதல் மகன் செவ்வாய்ப் பேட்டையிலும் இரண்டாவது மகன் பெரம்பூளுரிலும் வசித்து வருகின்றனர், மேலும் கடைசி மகன் ஸ்ரீதர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் மேலும் ஸ்ரீதர் அப்பகுதியில் தச்சராக பணியாற்றி வருகின்றனர், இவருக்கு குடிப்பழக்கம் மிகவும் அதிகமாக இருந்துள்ளது திருமணமாகாமல் இருக்கும் […]
என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர். இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இரண்டு நாள்களுக்கு முன் சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரை போலீசார் கைது […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, நீலகிரி ,சேலம் ,தர்மபுரி, கிருஷ்ணகிரி ,நாமக்கல் ,வேலூர், தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றுவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. மேலும் சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர்களிடம் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தாமல், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் […]
நீட் தேர்வு ஆள் மாறாட்ட முறைகேடு வழக்கில் கைப்பற்றப்பட்ட சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள மாணவர் தொடர்ந்த வழக்கில், தனது 10 மற்றும் 12-ம் வகுப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்க உத்தரவு விடவேண்டும் என மாணவர் கோரிக்கை வைத்தார். இந்நிலையில், இந்த வழக்கில் ஜூலை 31-ம் தேதி சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு […]
தேனி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், கோரோனோ பரவலை தடுக்க தமிழகஅரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது, இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசுமருத்துவமனை கொரோனா வார்டில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் ரசாயணங்கள் தீ பிடித்து எரிந்ததால் மருத்துவமனை முழுவதும் புகை மூட்டம் […]
பணத்தை மையமாக கொண்டு நடைபெறும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தியது. தமிழகத்தில் ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்யக்கோரி நெல்லையை சேர்ந்த சிலுவை என்பவர், மாடுறது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு, நீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பணத்தை மையமாக கொண்டு நடைபெறும் ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்ய மத்திய, மாநில அரசு உரிய சட்டம் இயற்ற வேண்டும் என […]
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர். இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இரண்டு நாள்களுக்கு முன் சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரை […]
27-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், வரும் 27-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டமானது அதிமுக அரசின் கொரோனா பேரிடர்கால மோசடிகள் மற்றும் நிர்வாகத்தோல்விகள் தொடர்பாக காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. “கழக தலைவர் […]