பேரறிவாளன்: மேலும் 1 மாதத்திற்கு பரோலை நீட்டித்தது தமிழக அரசு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை தமிழக அரசு மேலும் ஒரு மாதத்தற்கு நீடித்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதன்பின் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. ஏற்கனவே வழங்கப்பட்ட பரோல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் அவரது தாயார் அற்புதம்மாள் பரோலை நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை தமிழக அரசு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.
இதனிடையே, பேரறிவாளனை சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வந்தனர். மேலும், பரோலில் உள்ள பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025