நேரமில்லா நேரத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டது – எடப்பாடி பழனிசாமி

Opposition leader Edappadi Palanisamy has alleged that he was not given the opportunity to make some comments in the assembly.

சட்டப்பேரவையில் சில கருத்துக்களை எடுத்துரைக்க வாய்ப்பு வழங்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் செயல்படுத்திய திட்டங்களை திமுக முடக்கி வைத்திருப்பதாக அதிமுக தெரிவித்தனர். பின்னர் பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திமுக புறக்கணிப்பதாக குற்றசாட்டினார். கடந்த ஆட்சியின் திட்டங்களை குறித்து பேரவையில் பேச வாய்ப்பு கேட்டோம்.

பேரவையில் பேச வாய்ப்பளித்து பாதியில் நிறுத்தி விட்டதாகவும், இந்த நேரமில்லா நேரத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார். எனவே, இதனை கண்டித்து நாங்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.