வரும் 27 ம் தேதி பிரதமர்  நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்...! தமிழக பாஜக தலைவர் தமிழிசை

வரும் 27 ம் தேதி பிரதமர்  நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்  என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வரும் 27 ம் தேதி பிரதமர்  நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்  என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

unknown node

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,வரும் 27 ம் தேதி பிரதமர்  நரேந்திர மோடி  மதுரைக்கு வருகிறார். பிரதமர் மோடியின் மதுரை வருகை மூலம், தமிழகத்திற்கு மேலும் பல திட்டங்கள் கிடைக்க உதவும்.தொண்டர்களை பிரதமர் நரேந்திர மோடி  சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள்   பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஆர்வமாக உள்ளனர்.திருவாரூர் தேர்தல் குறித்து நாளை தான்  முடிவு வரும் . தற்போது, பிரதமர் நரேந்திர மோடியின் வருகை, லோக்சபா தேர்தலுக்கு தயார் செய்வது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். கூட்டணி குறித்து முழுமையாக செயல்படவில்லை. ஆனால், தேர்தலில் நிச்சயம் கூட்டணி அமைத்து செயல்படுவோம். தேர்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளது. இதனால், கவனமாக முடிவு எடுப்போம். 5 மாநில தேர்தலே அரையிறுதி கிடையாது. ஒரு தொகுதி தேர்தல் எப்படி அரையிறுதியாக இருக்கும். திருவாரூர் தேர்தல் நிச்சயம் திருப்பத்தை தரும்  என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.