பிரதமர் நரேந்திர மோடி ஜிஎஸ்டி என்ற பெயரில் 28% வட்டி வாங்குகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், மதுரையில் 5% வட்டியை கந்துவட்டி என்கிறோம். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஜிஎஸ்டி என்ற பெயரில் 28% வட்டி வாங்குகிறார்.மெக்காவின் ராஜா 2 கிழிந்த ஆடைகளை மட்டுமே வைத்திருந்தார். இந்தியாவின் ராஜா ரூ.10 லட்சத்திற்கு ஆடை வைத்துள்ளார். நாட்டை ஆள்பவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தன் வாழ்வு மூலம் உணர்த்தியவர் நபிகள் நாயகம் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.