புதுச்சேரி சட்டசபை வளாகம் வரும் 31ம் தேதி வரை மூடல்.!

புதுச்சேரிசட்டசபை 31ம் தேதி வரை மூடல்.
புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து மூடப்பட்டு சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள், சபை காவலர்கள், ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். மரத்தடியில் நடந்த பேரவை கூட்டத்தின் போது பணியில் இருந்த நிலையில் காவலருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
தற்போது புதுச்சேரிசட்டசபை வளாகம் 31ம் தேதி வரை மூடல். அலுவலக பணிகள் ஆகஸ்டு-3 திங்கட்கிழமை மீண்டும் தொடங்கும் என சட்டபேரவை செயலகம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025