மத்திய அரசின் கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.
unknown nodeபுயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
unknown nodeபின் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.அதன் பின்னர் அவர் கூறுகையில், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரினேன். புயல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.1,500 கோடி கோரப்பட்டது என்று தெரிவித்தார்.இந்நிலையில் மத்திய அரசு முதல் கட்ட நிவாரண நிதியாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட நிவாரண நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கியது மத்திய உள்துறை அமைச்சகம் . மாநில பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது மத்திய உள்துறை அமைச்சகம்.
unknown nodeஇந்நிலையில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம் என்று பதிவிட்டுள்ளார்.