ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த சந்தேகமும் இல்லை என தம்பிதுரை கூறினார் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், லண்டனில் 2018ல் ரிச்சர்ட் பீலேவை சந்தித்ததை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆணையத்தில் ஒப்புக்கொண்டார். அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த சந்தேகமும் இல்லை என தம்பிதுரை தெரிவித்தார். சசிகலா முதல்வராக வேண்டும் என ஆதரவு கடிதம் கொடுத்தேன் என தம்பிதுரை தெரிவித்தார் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.