சசிகலா, டிடிவி தினகரனை ஒருபோதும் சேர்க்க முடியாது – முதல்வர் பழனிசாமி மறைமுகம் பேச்சு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சியை கைப்பற்ற சதி செய்து வருகின்றனர் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நெருங்கி வருவதால், அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் பழனிசாமி அனல்பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி, கட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டி வருவதாக சசிகலா பெயரை குறிப்பிடாமல் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் அவர் புறப்பட்டுவிட்டார், கிட்டத்தட்ட நான்கு ஆண்டு காலம் அலைந்து அலைந்து பார்த்தார் டிடிவி தினகரன் என குறிப்பிட்டுள்ளார். அவர் கட்சியிலேயே 10 ஆண்டுகாலம் கிடையாது. ஜெயலலிதா இருக்கும்போதே தினகரன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர். எதோ சந்தர்ப்பத்தில் கட்சில் இணைந்து கொண்டார். இப்போது சதிவலை தீட்டி வருகிறார். இவர்களை ஒருபோதும் அதிமுக ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று பேசியுள்ளார்.
மேலும், அடிமட்ட தொண்டனாக இருப்போர் மட்டும்தான் அதிமுகவிலிருந்து இனி முதலமைச்சராக முடியும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். இது தொண்டன் ஆளுகின்ற கட்சி, உழைப்பால் உயர்ந்த கட்சி, ஒரு குடும்பம் ஆளுவதற்கு எப்பொழுதும் அதிமுக தலை வணங்காது என்றும் ஒருபோதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது எனவும் சசிகலா, டிடிவி தினகரன் குறித்து முதல்வர் மறைமுகமாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025