குட் நியூஸ்..! கல்லூரி மாணவ, மாணவியருக்கான உதவித்தொகை ரூ.1,000 வரவுவைப்பு!

கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களுக்கான தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 வழக்கம்போல் வரவு வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய அரசுகளால் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டம் தொடருமா என கேள்விகள் எழுந்த நிலையில், வழக்கம் போல் வரவுவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளும் இது குறித்து கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், இந்த மாத உதவித்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வழக்கம்போல் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் ஏராளமான மாணவர்களுக்கு இந்த ரூ.1,000 உதவித்தொகை கல்விச் செலவுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த உதவித்தொகை வழங்கப்படுவது மாணவர் வட்டாரத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் பேசியபோது முந்தைய ஆட்சிகளின் நல்ல திட்டங்களைத் தொடர்வோம் என பல வலியுறுத்தியிருந்தார். அந்த அறிவிப்பின் அடுத்தகட்டமாகவே கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படுவது அமைந்துள்ளது.இந்த நடவடிக்கை, புதிய அரசு மாணவர்களின் கல்வி மற்றும் நலன் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை உணர்த்துவதாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன.