ரசிகர்களின் ஆதரவை மட்டும் வைத்து ஆட்சியை பிடித்து விட முடியாது – சீமான்

நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் இன்று காலெடுத்து வைத்துள்ளார். அதன்படி, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது

vijay seeman

நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் இன்று காலெடுத்து வைத்துள்ளார். அதன்படி, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திரைப்பயணத்தில் பாக்கியருக்கும் பணிகளை முடித்துக்கொண்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என்றும் நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், மண்ணை ஆள்வதற்கு முன்பு முதலில் மக்களின் மனதை வெல்ல வேண்டும். கட்சி தொடங்குவது எளிது, அதனை இறுதி வரை கொண்டு செல்ல வேண்டும்.

யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக ஓட்டுகளில் கை வைக்க முடியாது – ஜெயக்குமார்

கட்சி தொடங்குவதை விட இறுதி வரை ஓயாமல் உழைக்க வேண்டும். இறுதி வரை உழைத்தால் கண்டிப்பாக வேற்றி நிச்சயம். ரசிகர்களின் ஆதரவை மட்டும் வைத்து ஆட்சியை பிடித்து விட முடியாது. எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கியபோது ஒரு வெற்றிடம் இருந்தது. அதனால், அவர் வெல்ல முடிந்தது. நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை தக்க வைக்க கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறிஉள்ளார்.