சிவாஜி விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி- எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்!

கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எழுச்சிப் பயணத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தினார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

aiadmk

கரூர்:அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி (EPS), கரூர் ‘எழுச்சிப் பயண’த்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார். செப்டம்பர் 26 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது “காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 5 கட்சிகளுக்கு சென்று வந்தவர். திருச்சி சிவா காமராஜர் பற்றி அவதூறாக பேசியபோது, செல்வப்பெருந்தகை ஏன் எதிர்க்கவில்லை?” என்று கேள்வி எழுப்பி, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் பிளவு உருவாகும் என முன்னறிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி , செந்தில் பாலாஜியின் கரூர் எழுச்சிப் பயணத்திற்கு தனது அணி இடையூறுகள் ஏற்படுத்தியதாகவும், அதிமுகவின் ‘அடக்குமுறை’யை மக்கள் வெள்ளம் தகர்த்தெறிந்ததாகவும் கூறினார். “நடிப்பில் சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி சிவாஜி கணேசன் இருந்திருந்தால், அவரே இவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பார். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு வேடம் போடுவார். அத்தனையும் கிரிமினல் எண்ணம்,” என்று சாடினார்.

மேலும், RK நகர் த bye-election-இல் வாக்காளர்களுக்கு ரூ.20 ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்து ஏமாற்றியதாகவும், தேர்தல் முடியும் வரை திமுகவில் இருப்பார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.செந்தில் பாலாஜி வழக்கில் வலிமையான ஆதாரங்களுடன் நீதிமன்றம் விசாரித்து வருவதாகவும், ஜெயலலிதா அவரை ஊழல் காரணமாக அமைச்சராக இருந்து நீக்கியதாகவும் எடப்பாடி பழனிச்சாமி நினைவூட்டினார். “மின்சாரத் துறை, டிரான்ஸ்பார்மர் ஊழல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோடிகள் ஊழல் செய்தவர். தேர்தலில் வென்ற பிறகு அந்தர் பல்டி அடிப்பவர்தான் செந்தில் பாலாஜி. கரூர் எழுச்சிப் பயணத்தில் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து தூக்கம் போய்விட்டது,” என்று அவர் கிண்டலடித்தார்.

அதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை “முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி வெளிநாடுகளுக்குப் போய் சைக்கிள் மட்டும் ஓட்டுபவர்” என்று விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி , “ஏழை மக்கள் ஏற்றம் பெற வேண்டும். ஏழைகள் இல்லா தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பதே அதிமுகவின் ஒரே நோக்கம்,” என்று வலியுறுத்தினார். கரூர் சேலம் ரோட்டில் நடந்த இந்தப் பிரச்சாரத்தில், அதிமுக தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 2026 தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்த அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்தார்.