தவெக மாநாட்டு திடலில் வெயில் காரணமாக தொண்டர்கள் சிலர் மயக்கம்.!

தவெக மாநாட்டு திடலில் வெயிலின் தாக்கத்தால் சில தொண்டர்கள் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, அவர்கள் மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

TVK Maanadu

மதுரை :மாநாட்டில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அக்கட்சியின் தொண்டர்கள், குவிந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, விஜய்யின் பேச்சை கேட்கவும், அவரை பார்க்கவும் மிகுந்த ஆவலுடன் இருக்கும் தொண்டர்கள் முன் வரிசையில் இடம் பிடிக்க துடிக்கின்றனர்.

இதனால் மாநாட்டு பந்தலுக்குள் செல்ல முறையான பாதைகளை விட்டு விட்டு 10 அடி உயர தடுப்புகளை தாண்டி ஆபத்தான முறையில் தொண்டர்கள் செல்கின்றனர். தற்பொழுது, மாநாடு திடலில் தொண்டர்கள் இரண்டு பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அவர்களை உடனே மீட்டு மருத்துவக்குழு சிகிச்சை அளிக்கிறது.

மாநாட்டில் குடிநீர் வசதி குறைபாடு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக தொண்டர்கள் சிரமத்திற்கு உள்ளானதாகவும், இதனால் சிலர் மயங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநாட்டில் கலந்து கொள்ள கூட்டம் கூட்டமாக அக்கட்சியின் தொண்டர்கள் படையெடுக்கின்றனர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் வெயிலும் கொளுத்தி வருகிறது. இதனால், தவெக தொண்டர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.