ஒரே விடுதியில் ஸ்டாலினும், தினகரனும் தங்கினார்கள் ...!திமுகவுடன் தினகரனுக்கு மறைமுக தொடர்பு...!  அமைச்சர் உதயகுமார் பரபரப்பு தகவல்

மதுரையில் ஸ்டாலினும், தினகரனும் ஒரே தனியார் விடுதியில் தங்கினர்  என்று  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் ஸ்டாலினும், தினகரனும் ஒரே தனியார் விடுதியில் தங்கினர்  என்று  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் உதயகுமார் கூறுகையில், மதுரையில் ஸ்டாலினும், தினகரனும் ஒரே தனியார் விடுதியில் தங்கினர். அதன் பின்னர் தான் இடைத்தேர்தலை சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளது .திமுகவுடன் தினகரனுக்கு மறைமுக தொடர்பு உள்ளது, இது காலத்தால் அவிழ்க்கப்படும்.

unknown node

மேலும் நீர் நிலைகளில் வீடுகளை கட்டுவதால், பெரும் மழையில் மீட்பு பணியில் சிக்கல் ஏற்படுகிறது. பருவமழை தொடர்பாக வானிலை தகவல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், இதுவரை எந்த எச்சரிக்கையும் இல்லை.

அதேபோல்  ஸ்ரீசத்ய சாய் சேவா சங்க தன்னார்வலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பேரிடர் உதவிப்படைக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பயிற்சி வழங்கப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.