வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசாதவர் ஸ்டாலின் –  பிரேமலதா விஜயகாந்த்

Stalin does not talk about projects - Premalatha Vijayakanth

வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசாதவர் ஸ்டாலின் என்று  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் உடுமலையில் தேர்தல்  பிரச்சாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.அதில், இந்த தேர்தல் மிக முக்கியமானது என்றும்  எதிர்த்து நிற்கும் அணியை பற்றி பேசத் தேவையில்லை.வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசாதவர் ஸ்டாலின்  என்று  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.