விஜயின் தவெக மாநாட்டில் அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.! வெளியான முக்கிய தகவல்.!

மாநாடு நன்றாக நடைபெறவேண்டும் என த.வெ.க தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் அஜித் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

tvk vijay ajith

விக்கிரவாண்டி : விஜயின் அரசியல் பயணத்தில் முக்கியமாகப் பார்க்கப்படும் நிகழ்வான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் வருகின்ற அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, மாநாடு நடப்பதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

மாநாடுக்கு வாழ்த்து தெரிவித்த அஜித்?

விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை நடத்துவதால் அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அஜித் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் எழுதிய அந்த கடிதத்தில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பது பற்றிய விஷயத்தை விஜய் மாநாடு மேடையில் மக்களுக்கு முன்பு படித்து காட்டவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் அஜித் ஒற்றுமை

சினிமாவில் இவர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே பழகி வருகிறார்கள். விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அஜித் போன் கால் செய்து கூட அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தார். அதைப்போல, அஜித் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட அவருக்குக் கால் செய்து நலம் விசாரித்தார்.

இருவரும் இப்படி ஒற்றுமையாக இருக்கும் சூழலில், விஜயின் அரசியல் பயணத்தில் முக்கியமான நிகழ்வான மாநாட்டிற்கு அஜித் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து இருப்பது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், த.வெ.க மாநாட்டிற்குப் பல அஜித் ரசிகர்களும் வருகை தரத் திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies