கஜா புயல் பாதிப்பு ...!விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை, வாழைக்கன்றுகள் வழங்க தமிழக அரசு முடிவு...!

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை, வாழைக்கன்றுகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை, வாழைக்கன்றுகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் ,புதுக்கோட்டை , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.

unknown node

அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர்,புதுக்கோட்டை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புனர்வாழ்வு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி  புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை, வாழைக்கன்றுகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.