பாஜகவுடன் அதிமுக அமைத்துள்ள கூட்டணி, தேர்தலுக்காக வைக்கப்பட்ட கூட்டணி -அன்வர் ராஜா தகவல்

This news gives information about The AIADMK-led coalition with the BJP, the coalition for the elections -Anvar Raja

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக-பாமக  உள்ளிட்ட கட்சிகள் உள்ளது.

பாஜகவுடன் அதிமுக அமைத்துள்ள கூட்டணி, தேர்தலுக்காக வைக்கப்பட்ட கூட்டணி  என்று அதிமுக எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.அதேபோல்  அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி கட்சிக்கு தலா  ஒரு தொகுதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது.

unknown node

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக அதிமுக எம்.பி அன்வர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஜெயலலிதாவிற்கு இருந்த துணிச்சல் அதிமுகவில் யாருக்கும் இல்லை.பாஜகவுடன் அதிமுக அமைத்துள்ள கூட்டணி, தேர்தலுக்காக வைக்கப்பட்ட கூட்டணி தானே தவிர கொள்கை அளவிலானது அல்ல.

அதிமுக மீது நான் அதிருப்தியில் இருப்பதாக பரவும் தகவல் உண்மையல்ல என்று அதிமுக எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.