அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்தோ, தனித்தோ போட்டியிட்டாலும் தமிழகத்தில் வெற்றிபெற வாய்ப்பில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், 10% இடஒதுக்கீடு என்பது தேர்தலை மனதில் கொண்டே மத்திய அரசு கொண்டு வந்துள்ளது .10% இடஒதுக்கீட்டை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. ஆனால் கொண்டு வந்த நேரம் சரியல்ல.
தேர்தலுக்காகவே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றுள்ளது. அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்தோ, தனித்தோ போட்டியிட்டாலும் தமிழகத்தில் வெற்றிபெற வாய்ப்பில்லை.
போராடும் போது அரசு ஊழியர்களை அழைத்து பேசி அரசு சுமுக தீர்வு காண வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி தமிழகத்தில் பரப்புரை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.