பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து அமைச்சரவை முடிவு எடுத்தது எடுத்ததுதான் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டு ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.தமிழக அமைச்சரவை முடிவு எடுத்தது எடுத்ததுதான். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.நேற்று, இன்று, நாளை என்று தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதே திமுகவின் கொள்கை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.