சென்னை :பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் நடத்திய பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமானது என இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், ராமதாஸ் தரப்பின் குற்றச்சாட்டுகளின்படி, கட்சியின் நிறுவனரான தனக்கு அழைப்பு விடுக்கப்படாமல் அன்புமணி பொதுக்குழுவை நடத்தியதாகவும், இது கட்சி விதிகளுக்கு முரணானது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு வருடத்திற்கு பதவிக்காலத்தை நீட்டித்தது சட்டவிரோதமானது என்றும், அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கவோ அல்லது இடைநீக்கம் செய்யவோ குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அன்புமணி மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கோரியுள்ளார். இந்த புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
