தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது..!அமைச்சர் ஜெயக்குமார்

சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி வரி குறைய வாய்ப்பு உள்ளது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டம் நடைபெற்றது.ஜிஎஸ்டி

சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி வரி குறைய வாய்ப்பு உள்ளது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டம் நடைபெற்றது.ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

unknown node

இதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,ஒவ்வொரு ஜிஎஸ்டி கூட்டத்திலும் தமிழக அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.100க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 28%ல் இருந்து 18%ஆக குறைக்கப்பட்டது. ரூ.100க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 12%ஆக குறைக்கப்பட்டது .சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி வரி குறைய வாய்ப்பு உள்ளது.அதேபோல் தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.