18 எம்எல்ஏக்களின் அரசியல் வாழ்க்கையை முடித்து வைத்ததுதான் அவர் செய்த பெரிய காரியம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
unknown nodeஇந்நிலையில் தினகரன் தொடர்பாக அமைச்சர் காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 18 எம்எல்ஏக்களின் அரசியல் வாழ்க்கையை முடித்து வைத்ததுதான் அவர் செய்த பெரிய காரியம். அதிமுகவை ஒரு தினகரன் அல்ல, எத்தனை பேர் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.தினகரன் கூறிய எதுவுமே இதுவரை நடந்தது கிடையாது என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.